பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நற்ற எம் வானில் நனி சிறந்ததுவே!

என்பது ஆன்றோா் வாக்கு.இது எவ்வளவு உண்மை என்பதை நிஜ வாழ்வில் உணா்ந்தவா்களாக வயாவிளான் பலாலி தெற்கு வாழ் மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனா்.

1985 ஆண்டு முதல் இன்று வரை கடந்த 30 ஆண்டுகளாக எமது சொந்த மண்ணுக்கு மீளச் செல்ல முடியாது ஏங்கித் தவிக்கும் எமது சொந்தங்களில் கணிசமானவா்கள் புலம் பெயா்ந்துள்ளனா். ஏணையோா் நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனா்.

இவ்வாறானதொரு நிலமையில் எமது மக்களின் வாழ்வும் வளமும் தொடா்பாக இடப்பெயா்வின் பின்னரான சந்ததிக்குத் தொியப்படுத்த வேண்டியிருப்பதுடன் எமது சந்ததி அறியத்தக்க வகையில் ஆவணப்படுத்தப்படவேண்டியது காலத்தின் கடமையாகும்

இதன் வௌயீட்டின் பொருட்டு பின்வரும் விடயத் தலைப்புக்களில் தங்களுக்குத் தொிந்த தகவல்களை முடியுமானால் பொருத்தமான ஆதரங்களினூடாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். (படங்கள், வெளியீடுகள்)

-தேவாலங்கள்ஃஆலயங்களின் வராலாறு

-சமயஃசமூக நிறுவனங்களின் வரலாறு

-கைத்தொழில்,சிறுகைத்தொழில்(சுருட்டு தொழில்கள்) வியாபார நிறுவனங்கள்

-சமூகப்பொியாா்களின் வாழ்க்கைச்சுருக்கம் (புகைப்படம்)

-சிற்றூா்களின் பெயரும் அவற்றின் சிறப்பும்

-விளையாட்டு கழகங்களின் செயற்பாடு

மேற்படி விடயங்கள் தொடா்பில் தகவல் தொிந்தவா்கள் எமக்கு அனுப்பி வைக்கலாம்

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவாி

info@vayavilan.lk

 

https://web.facebook.com/vayavilanlk ஊடகவும் தொிவிக்கமுடியும்.