‘‘வீழ்ச்சியிலும் வளா்ச்சி கண்ட வயாவிளான் மத்தி‘‘

0
1917
முகப்பு வாயில்

வடக்கே கடலும் கிழக்கு,தெற்கு மேற்கே விவ

முகப்பு வாயில்
முகப்பு வாயில்

வடக்கே கடலும் கிழக்கு,தெற்கு மேற்கே விவசாயநிலங்களையும் கொண்டு யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியில் அழகுடன் மிளிர்ந்து நிற்கின்றது வயாவிளான் மத்தியகல்லூரி.
நகரச்சூழலில் இருந்து விடுபட்டு ஒரு கிராமிய உணர்வுடன் மாணவர்கள் எதிர்காலத்தில் தமது கல்வியினை கொண்டு நடத்தவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு வசாவிளான் மத்திய கல்லூரியினை ஆரம்பித்து வைக்க தனது

காணியினை வழங்கியிருந்தார் பத்திரிகையாளரான ஈழகேசரி பொன்னையா.
அந்த வகையில் இலவச கல்வியின் தந்தை என போற்றப்படும் சீ.டபள்யூ.டபள்யூ கன்னங்கரா அவர்களின் சிந்தனையில் ஒன்றான, கிராமப்புற வறிய மாணவர்கள் நகர்புற மாணவர்களை போல சகலவசதிகளுடனும் கிராமச்சூழலை கொண்ட இடத்தில் கல்வியினை பெற்றுக்கொள்வது அதன் இலக்காக இருந்தது.

அதன் பொருட்டு 15-10 1945 அன்று வயாவிளான் தெற்கு வேலுப்பிள்ளை வித்தியாலயத்தில் நடைபெற்ற ஒன்றுகூடலில் வசாவிளான் மத்திய கல்லூரி தோற்றம் பற்றிய ஆரம்ப முடிவு எடுக்கப்பட்டு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதே இதன் வரலாறு.
1986க்கு முன்னர் சகலவசதிகளுடனும் இக் கல்லூரி சிறந்து விளங்கியது. அறிவியல்,கலைப்பாடங்கள், உலோகவேலை,தச்சுதொழில், நெசவு,தையல்,மனையியல் போன்ற பல்வேறு பாடங்கள் போதிக்கப்பட்டன.

1978ஆண்டளவில் திரையரங்கு மற்றும் நாடகவகுப்புக்களை உயர்தர மாணவர்களுக்கு போதிப்பதில் இப் பாடசாலை முதற்தர பாடசாலையாக இருந்தது எனலாம்.

மேலும் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த இலங்கையின் பிறமாவட்ட மாணவர்கள் இப் பாடசாலையில் அனுமதி பெற்று விடுதியில் தங்கி நின்று கல்வி பெற்ற வரலாறு யாழ்மாவட்டத்தின் முதற்பெருமை இப் பாடசாலையினையே சாரும்.
இடப்பெயர்வு
ஆரம்பகாலம் தொட்டே இப் பாடசாலை ஏராளமான இடப்பெயர்வுகளை தொடர்ச்சியாக சந்தித்து வந்துள்ளது. 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள் நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து இப் பாடசாலை புன்னாலைக்கட்டுவன் மகாவித்தியாலயத்திலும், அல்லாரை, நாவற்குழி பகுதிகளிலும் கல்வியினை மாணவர்களுக்கு போதித்தது

பாடசாலை முதல்வா் வீ..ரீ..ஜெயந்தன்.
பாடசாலை முதல்வா் வீ..ரீ..ஜெயந்தன்.

பின்னர் 1996 முதல் உரும்பிராய் பகுதியில் பொதுமக்களுடைய காணி ஒன்றில் தற்காலிக பாடசாலை கட்டிடம் அமைக்கப்பட்டு நீண்டகாலமாக இயங்கியது.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இப் பாடசாலை இந்திய இலங்கை இராணுவத்தின் முக்கிய படைத்தளமாகவும், பாதுகாப்பு தலமையாகவும் விளங்கியது என இப் பாடசாலையின் முன்னாள் முதல்வர் ஒருவர் கூறினர்.

அதன் காரணமாக பாடசாலையின் இரண்டு கட்டிடங்களை தவிர அணைத்து கட்டிடங்கள்,பாரிய நீர்த்தாங்கியும் அழிவுற்றது. கட்டிடங்கள் கூரையின்றி வெறும் சுவர்களாகவே 28-10 2010 அன்று கல்லூரி சமூகத்திடம் இராணுவத்தினர் ஒப்படைத்திருந்தனர்.

தற்போது இப் பாடசாலை புலம்பெயர்வாழ் மக்களின் உதவியுடனும், கல்வி அமைச்சின் பெரும்பங்குடனும் அழிவடைந்த கட்டிடங்கள் அமைக்கப்பட்டு கல்வியினை வழங்கி வருகின்றது.

பாடசாலை கல்வி வளர்ச்சிக்கு சான்றாக 2014ஆம் ஆண்டு 1,100 மாணவர்களும், 2015 1,300 மாணவர்களும் 2016 ஆம் ஆண்டு தற்போது 1,400 மாணவர்களுடன் 56ஆசிரியர்கள் கல்வியினை போதித்து வருகின்றனர்.

73ஆசிரியர்கள் இப் பாடசாலைக்கு தேவையாக உள்ள நிலையில் 56ஆசரியர்கள் கற்பித்தல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். பாடசாலை முதல்வராக வீ.ரீ.ஜெயந்தன் கடமையாற்றுகின்றார்.unnamed-2

விளையாட்டு துறை

விளையாட்டு துறை ஆசரியர் திரு கே. பகீரதன் அவர்கள் வழிகாட்டலில் உதைப்பந்தாட்ட பிரிவு, மகளீருக்கான கரப்பந்தாட்ட பிரிவு, போன்ற விளையாட்டு துறைகளில் இக் கல்லூரி மாணவர்கள் பிரகாசித்து வருகின்றனர்.

இப் பிரிவுகளில் உள்ள மாணவர்கள் சிறப்பாக விளையாடி பல முறை தேசிய மட்டப்போட்டிகளில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அன்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பளுதூக்கும் பிரிவில் இப் பாடசாலை மாணவிகள் மாவட்ட மற்றும் மாகாணநிலைகளில் தங்கப்பதங்களை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளனர்.
மைதானப்பிரச்சிணை

img_0018
240 பரப்பளவினை கொண்ட இப்பாடசாலையே யாழ் மாவட்டத்தில் அதிக பரப்பிணை கொண்ட பாடசாலையாகவும், சர்வதேச தரத்திற்கு அமைய 400 மீற்றர் ஓட்டப்பாதையினை கொண்ட பாடசாலையாகவும் உள்ளது. யுத்தம் காரணமாக இப் பாடசாலை இடம்பெயர்ந்ததை அடுத்து இங்குள்ள மைதானம் காடு மண்டி காணப்பட்டது.

தற்போது இராணுவத்தினரின் இயந்திரவலுவுடன்  பாடசாலையின் மைதானம் மீளவும் சர்வதேச தரத்திற்கு அமைய அமைக்கப்பட்டு வருகின்றது.

இதற்காக மனத வலுவினை  காங்கேசன்துறையில் நிலைகொண்டுள்ள 5வது பொறியியல் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குள்ள பார்வையாளர் அரங்கினை (தந்தை செல்வா அரங்கு) தாம் மீள் கட்டுமானம் செய்து தருவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைப்பீடம் கூறியிருந்தாலும் கடந்த நான்கு வருடமாக கட்டுமாணப்பணிகள் எதுவும் இன்றி கைவிடப்பட்டுள்ளது. மைதான புனரமைப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதால் மேலதிக போட்டிகளுக்காக பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொள்ள முடியதா நிலை உள்ளது.

தற்போதுள்ள தேவைபாடுகள்.

இப் பாடசாலையில் அதிபர் காரியாலம் இல்லாமை பாரிய பிரச்சிணையான ஒன்றாக உள்ளது. மாணவர்களின் வகுப்பறை கட்டிடத்தினையே அதிபர் காரியாலயாக உபயோகிக்க பயன்படுகிறது.
முhணவர்களுடைய கற்றலுக்கான போதிய வகுப்பறைகள் இன்மை. சுகல பாடங்களுக்குமான தேவைப்பாட்டு அலகுகள்(நாட்டியஅறை, சங்கீத அறை, வாழ்க்கைதிறன் செயற்பாட்டு அறை, தொழில்நுட்ப அலகு போன்ற செயற்பாட்டு அலகுகளுக்கான வசதி இன்னமும் செய்து கொடுக்கப்படவில்லை.

இதனால் மாணவர்கள் தமது மேலதி ஆளுமைகளை வளர்த்து கொள்வது மழுங்கடிக்கப்படுவதாக கல்லூரி சமூகத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

போதிய பிரார்த்தணை மண்டம் ஒன்று இல்லாததனால் ஒரே நாளில் எல்லா மாணவர்களையும் உட்கார வைத்து பிராத்தணை மேற்கொள்வதில் பல சிரமங்களை பாடசாலை சமுகம் எதிர்நோக்கி வருகின்றது.

தற்போது உள்ள பிரார்தணை மண்டபம் ஆரம்பத்தில் கட்டப்பட்டிருந்தது. மக்கள் மீளக்குடியமர ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து மாணவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது.

எனவே இப் பாடசாலையில் போதிய கட்டிடங்களை கட்டுவதற்குரிய இடவசிதி இருந்தும் தேவையான கட்டிடங்களை கட்டிக்கொடுப்பதற்கு கல்வி அமைச்சு பின்னடித்து வருவதாக கல்லூரி சமுகம் கவலை தெரிவிக்கின்றது.

முடிவுரை
1990களுக்கு பின் இன்று வரை மாறி வந்துள்ள இலங்கை அரசாங்கம் கல்வித்துறையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. தேசியபாடசாலை திட்டம், நவோதய பாடசாலை திட்டம், ஆயிரம் பாடசாலை திட்டம், அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம், போன்ற திட்டங்களில் நாவோதயா,ஆயிரம் பாடசாலைதிட்டங்களுள் இப்பாடசாலை உள்ளடக்கப்பட்டிருந்தது. ஆனால் முழுமையான யுத்தம், இடப்பெயர்வு காரணமாகவும், மிக அருகில் பலாலி உயர்பாதுகாப்பு வலயம் உள்ள காரணத்தாலும், பூரண பலனை இப் பாடசாலை அடைந்து கொள்ளமுடியவில்லை.

இருந்தும் ஆயிரம் பாடசாலை திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப ஆய்வு கூடமும், தொழில் நுட்ப பீடமும் கிடைக்கபெற்றது. ஆனால் தொழில் நுட்ப பீடம் முற்றுப்பெறாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேசிய கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட தொழில் நுட்ப துறை பாடநெறியில் மாணவர் வீழ்ச்சி ஏற்படுதப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் எந்த பாடசாலைக்கும் இல்லாத இன்னொரு பெருமை இப் பாடசாலைக்கு உள்ளது. அதாவது மூன்று தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியுள்ள பாடசாலையாக வசாவிளான் மத்திய கல்லூரி இலங்கையில் ஒன்றாக கூறப்படுகிறது.

அதாவது இப் பாடசாலையில் அமைக்கப்படும் வாக்குசாவடியில் மானிப்பாய் தேர்தல்தொகுதி,கோப்பாய் தேர்தல் தொகுதி, மற்றும் காங்கேன்துறை தேர்தல் தொகுதிக்குரிய வாக்குகள் இப்பாடசாலையில் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் இப் பாடசாலையினை இவ்விடத்தில் ஆரம்பிப்பதற்குரிய நோக்கம்.

பலாலி பிரதான வீதியில் மூன்று தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கி இப் பாடசாலை அமைக்கப்படும் போது, இப் பாடசாலையில் கிடைக்கும் வாக்கு வங்கி மூலம் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவியில் இப் பாடசாலையினை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லும் எண்ணமே பத்திரிகையாளரான ஈழகேசரி பொன்னையா, சட்டத்தரணி வ.இராசநாயகம் அகிய இருவரின் தீர்க்கதரிசன சிந்தணையாக இருந்துள்ளதாக இப் பாடசாலையின் முதல்வர் தெரிவித்தார்.

வலிகாமம் வலியத்தில் போரால் பாதிப்புற்ற பாடசாலையென்றால் அது வசாவிளான் மத்திய கல்லூரியினையே சாரும். இப் பாடசாலையினை மீள ஆரம்பிக்கப்படும் போது அதன் முன்னைய நிலையினை தோற்றிவிப்பது அதிகாரிகளின் கடமையல்லவா? மாணவர்களின் கல்வி பெறுபேறும் அதன் தனித்துவமும் உயர்ந்து செல்லும் போது பாடசாலையினை தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பவர்கள் யார் என்ற கேள்வி கல்லூரி சமூகத்தின் மத்தியில் எழுப்பப்படுகின்றது.