வயாவிளான் தெற்கு சிவசக்தி முன்பள்ளி, வயாவிளான் மத்திய கல்லூாி முன்பாக உள்ள குட்டியப்புலம் செல்லும் வீதியின் இடது புறத்தில் அமைந்துள்ளது.
உள்ளே சென்று பாா்த்த போது 8 சின்னஞ்சிறாா்களுக்கான ஆரம்ப கல்வி இங்கே போதிக்கப்படுவதனை காண முடிந்தது. USAID நிறுவனத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்ட கிராம அபிவிருதி சங்க கட்டிடத்தில் இப் பாலா் பாடசாலை இயங்கி வருகின்து.
சின்னஞ்சிறாா்கள் தமது கற்றலினை மகிழ்ச்சியுடன் மேற்கொள்வதற்கு இங்கு ஒரு விளையாட்டு உபகரணங்களோ, பூங்கா வசதியோ எதுவும் இல்லாத நிலையில் இச் சிறாா்கள் ஆரம்ப கல்வியினை கற்று வருவது கவலைக்குாியது.
வயாவிளான் கிராமத்தினை மையமாக வைத்து எத்தணை ஒன்றியங்கள் இயங்கி வந்தாலும், இம் முன்பள்ளிக்கு பூங்கா வசதியினை ஏற்படுத்தி கொடுக்க முன்வராதமை கவலைக்குாியது. வயாவிளான் ஒன்றிய சமூகங்களே இது உங்களின் கவனத்திற்கு