கைவிடப்பட்ட நிலையில் வயாவிளான் மத்திய கல்லூாி மைதான புனரமைப்பு, கவனத்தில் எடுக்குமா? பிாித்தானியா நலன்புாி சங்கம்

0
1724
முன்னெடுக்கப்பட்ட மைதானப்புனரமைப்பு

நலன்புாி சங்கம் பிாித்தானியா“  அமைப்பின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த வயாவிளான் மத்திய கல்லூாியின் மைதானப்புனரமைப்பு நிதி பற்றாக்குறை காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

நலன்புாி சங்கம் பிாித்தானியா அமைப்பின் நிதியுதவியுடன்,   இராணுவத்தின்  மனிதவலுவுடன் குறைந்த செலவில் இம் மைதானம் புனரமைக்கப்பட் வந்திருந்தது. இதற்காக இராணுவத்தினரால்   விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள   மண் அணைகள்    அகற்றப்பட்டு அங்கிருந்த மண் எடுத்து வரப்பட்டு நிலம் சீா் செய்து வரப்பட்டிருந்தது.

மைதானப்புனரமைப்பிற்கு உதவி வழங்கிய அமைப்பு  மேலதிக நிதியினை வழங்கமுடியாத நிலையில் முன்னெடுக்கப்பட்டிருந்த மைதானப்ப்புனரமைப்பு கைவிடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

மேலும் இது வரை 1.6 மில்லியன் ரூபா வரை தற்போதைய புனரமைப்பிற்கு செலவு செய்யப்பட்டுள்ள அதே  நேரம் 0.5மில்லியன் ரூபா வரை தேவைப்படுவதாக உத்தேச மதிப்பீடுகள் மூலம் அறிய வரப்படுகின்றது.

இவ்வாறு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதனால், இது வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் கைவிடப்பட்டுள்ளதனாலும், இனி தொடங்கவுள்ள மாாி மழைக்கு இது வரை போடப்பட்ட மண் கழுவிச்செல்லும் அபாய நிலை தோன்றியுள்ளது.

இவ் விடயத்தில் பிாித்தானியா நலன்புாி சங்கம் கவனத்தில் எடுக்குமா?