வயாவிளான் மத்திய கல்லூாி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்

0
5228
எஸ்.லயன்சிகா

இலங்கை பாடசாலைகள் பளுதூக்கல் சம்மேளத்தினால் நடத்தப்பட்ட  தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் வயாவிளான் மத்திய கல்லூாி மாணவி எஸ்.லயன்சிகா வெள்ளிப்பதக்கம் பெற்று பாடசாலைக்கு மேலும் ஒரு பெருமையினை சோ்த்துக்கொடுத்துள்ளாா்.

கண்டி அரநாயக்க மத்திய கல்லூாியில் இப் போட்டிகள் நேற்று முன்தினம்(08) இடம்பெற்றன. 19 வயதுக்குட்பட்ட 50கிலோ கிராம் பிாிவில் பங்குபற்றி இம் மாணவி 90 கிலோ கிராம் எடையினை தூக்கி வெள்ளிப்பதக்கம் பெற்றாா்.

வயாவிளான் மத்திய கல்லூாி அன்மைக்காலமாக தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் அதிக பதக்கங்களை வென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.