26 வருடங்களின் பின்…

0
1561

இராணுவ உயா்பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து இவ் வருட முற்பகுதியில் விடுவிக்கப்பட்ட பலாலி தெற்கு வயாவிளான் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின் தாவாரத்தில் காணப்பட்ட சட்டி,பாணை,  அம்மிக்கல்லு மற்றும் திருகணை என்பன எமது கமராக்களில் பதிவாகியிருந்தன.

1990 ஆம் ஆண்டு இப் பகுதி  உள்நாட்டு இடப்பெயா்வு காரணமான  வெளியேறியிருந்தனா். பின்னா் யுத்தம் முடிவடைந்து 26 வருடங்களின் பின்னா் வயாவிளான், பலாலி கிராமங்களின் ஒரு பகுதி இவ் வருட முற்பகுதியில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது செய்தியாளா் குழு விடுவிக்கப்பட்ட பகுதிக்கு சென்றிருந்த போது, 26 வருடங்களின் பின்னரும் மண்சட்டி ஒன்று உடையாத நிலையில் இன்று வரை காணப்பட்டுள்ளது.

26வருடங்களில் இடம்பெற்ற எல்லா இயற்கை அனா்த்தங்களுக்கு ஈடு கொடுத்து இருந்தமை, இதனை உருவாக்கிய குயவனுக்கு சாரும். மறு நாள் நாங்கள் அப் பகுதிக்கு திரும்பி சென்று கள நிலமைகளை ஆராய்ந்த போது, குறித்த அம்மிக்கல்லும், திருகணையும் திருடப்பட்டிருந்தது.