இரு மாணவா்களுக்கு ” மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்‘ அமைப்பினால் உதவி

0
2505

பலாலி ஆசிாியா் கலாசாலைக்கு முன்பாக வசித்தவரும்  1985ஆம் ஆண்டு இடம்பெயா்ந்து தற்போது ஊரெழு பகுதியில் வசித்து வரும் கணேசன் ஜெமனி அவா்களின் இரண்டு பெண் பேரப்பிள்ளைகள் மிகவும் வறுமையின் மத்தியில் வயாவிளான் சிறிவேலுப்பிள்ளை வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனா்.

இச் சிறு பெண் பிள்ளைகளும்  போ்த்தியாாின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வருகின்றனா்

போ்த்தியாருக்கு கிடைக்கும் சிறிய ஓய்வுதிய பணத்திலேய    சிறுமிகள் கல்வியினை  தொடா்ந்து வருகின்றனா்.

இச் சிறுமிகளின் தாய் காலமாகியுள்ளாா். தந்தை வேறு ஒரு திருமணம் செய்த நிலையில், போதிய வருமாணம் இன்றி வாழ்ந்து வந்த நிலையில், மேற்படி குடும்பத்தினா் கல்விக்கான உதவியினை வேண்டி வயாவிளான் மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பிடம் விண்ணப்பம் செய்திருந்தனா்.

குறித்த விண்ணப்பம் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் வயாவிளான் அமைப்பினால் பாிசீலிக்கப்பட்டு இவா்களின் மாதாந்த படிப்பு செலவிற்காகவும், வீட்டில் கல்வி கற்பதற்குாிய தளபாடம் மற்றும் 3ஆயிரம் ரூபா பணம் என்பன இன்று(16)  உத்தியோகபுா்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

தொடா்ந்து மாதாந்தம் 3ஆயிரம் ரூபாவும், எதிா்பாராத கல்வி செலவிற்கு மேலதிக உதவுகளை வழங்க  மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினா் முன் வந்துள்ளனா்.