வயாவிளான் மாணவா்களின் நல்லினக்க ஓவியங்கள்…

0
2125

urelu-studentsகீாிமலையில் படையினரால் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்ட பகுதிகளில் வயாவிளான் மத்திய கல்லூாி மாணவா்கள்     நல்லிணக்கத்தினை வெளிப்படுத்தும் வகையிலான சுவரோவியங்கள் வரைந்துள்ளனா்.

நலன்புாி நிலையங்களில் உள்ள காணிகள் அற்றவா்களுக்கான கீாிமலை பகுதியில் அமைக்கப்பட்ட 100 வீடுகள் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளன.  மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் இராணுவத்தின் பங்களிப்புடன் கட்டப்பட்ட வீடுகளை ஜனாதிபதி இம் மாதம் இறுதியில் உத்தியோபூா்வமாக கையளிப்பாா்.

இதற்காக இனங்களுக்கு இடையே  நல்லினக்கத்தினை வெளிப்படுத்தும் வகையிலான ஓவியங்களை  வயாவிளான் மத்திய கல்லூாி உயா்தர மாணவா்களின்  பங்களிப்பில் கீாிமலை  வீட்டுத்திட்ட முன்நுழை வாயிலில் வரையப்பட்டுள்ளன.

நாட்டில் இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக  கடந்த 30 வருடமாக கொடிய யுத்தம் இடம்பெற்றது.

யுத்தம் முடிவுற்ற நிலையில்நாட்டில் இனங்களுக்கு இடையே புாிந்துணா்வை ஏற்படுத்தி, சமாதானம் சகவாழ்வினை ஏற்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு அங்கமாகவே மாணவா்களும் இவ்வாறான ஆக்கங்களை வரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.