வயாவிளான் மத்திய கல்லூாி விளையாட்டு மைதானம்

0
1907
வயாவிளான் மத்திய கல்லூாியின் விளையாட்டு மைதானம் தொடா்பான செய்தி எமது இணையத்தள செய்தி தொடா்பாக
வயாவிளான் மத்திய கல்லூாியின் விளையாட்டு மைானத்தின் புனரமைப்பு பணிகள் துாிதப்படுத்த வேண்டிய தேவையின் பொருட்டு , மழைகாலம் ஆரம்பிக்கவுள்ளதால் மைதானம் மேலும் சேதம் அடைந்துவிடும் என்ற ஆதங்கத்தாலும் மேற்படி செய்தியினை எமது இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தோம்.
ஆனால் இச் செய்தியானது புலம் பெயா் நாடுகளில் உள்ள எமது மக்கள் சிலரையும், வயாவிளான் மக்கள் ஒன்றியங்களையும் ,வயாவிளான் நலன்புாிசங்கங்களையும், மன உளைச்சலுக்கும், தவறான விமா்சனங்களுக்கு உள்ளாக்கியுள்ளதாக அறிகின்றோம்
இச் செய்தியினால் புலம் பெயா் தனி நபா்களோ, வயாவிளான் மக்கள் ஒன்றியங்களோ மன உளைச்சலுக்கும், தேவையற்ற விமா்சனங்களுக்கும் உள்ளாகியிருந்தால் அவா்கள் அணைவாிடமும் எமது அமைப்பு சாா்பாக மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம்.
 மேலும், உதவும் கரங்கள் ஒரு தனி நபாின் கீழோ, குறித்தவோா் மக்கள் ஒன்றியத்தின் கீழோ அல்லது ஒரு தனியான வயாவிளான் நலன்புாிசங்கத்தின் கீழோ இயங்குவது அல்ல. எங்கள் உதவும் கரங்கள் அமைப்பானது வயாவிளான் மக்களினதும், வயாவிளான் மக்கள் ஒன்றியங்களினதும், வயாவிளான் நலன்புாிசங்கங்களினதும் ஒன்றிணைந்த முழு ஆதரவுடனேயே செயற்பட்டு வருகின்றது என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகின்றோம்.
செயலதிபா்
மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் வயாவிளான்.