26 வருடங்களின் பின்னர் பலாலி ஆரோக்கிய மாத ஆலய பெருவிழா…

1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் பலாலி வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஆராக்கிய மாத ஆலய பெருவிழா இன்று(08) பல்லாயிரக்கணக்கான மக்களுடன் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது._dsc3311

1936ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயம் பலாலி வாழ் மக்களின் வாழக்கையுடன் பிண்ணிப்பிணைந்து காணப்பட்டது. உள்ள நாட்டு யுத்தம் இடம்பெற்ற போது 1990 ஆம் ஆண்டு இப் பகுதி வாழ் மக்கள் இடம்பெயர்ந்து பருத்தித்துறை, சக்கோட்டை, பகுதிகளில் வாழந்து வந்தனர்.

மீண்டும் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் பலாலி உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்த போதும் ஆரோக்கியமாத ஆலயம் இராணுவக்கட்டுப்பாட்டிற்குள்ளேயே காணப்படுகின்றது. ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் ஆயர் இல்லத்தினால் குறித்த ஆலயத்தின் பெருவிழாவினை சிறப்பாக செய்வதற்கு இராணுவ கட்டளைத்தளபதியிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

இராணுவத்தின் உதவியுடன் ஆலயத்தினை சூழ்ந்து இருந்த பற்றைக்காடுகள் கனரக இயந்திரத்தின் உதவியுடன் துப்பரவு செய்து கொடுக்கப்பட்டது.
இதற்கமைவாக இன்று(08) காலை 9:00 மணிக்கு அன்ரனிபுரம் பகுதியில் அமைந்துள்ள சோதணைசாவடியில் வைத்து ஆலயத்திற்கு வருகை தந்த மக்களுடைய அடையாள அட்டைகள் பதிவு செய்யப்பட்டு இராணுவ வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டனர்.
புதிதாக பிரதிஸ்ரை செய்யப்பட்ட ஆராக்கியமாதவின் திருச்சொருபத்திற்கு யாழ்.குருமுதல்வர் ஜெபரட்ணம் திருப்பலி ஒப்புக்கொடுத்தார். ஆலயத்திற்கு வருகை தந்த மக்களுக்கு தாக சாந்தி நிலையம், அன்னதானம் என்பன ஆலய நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டது. இவ் ஆலய பெருவிழாவில் யாழ்மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ்சேனநாயக்க, விமானப்படை தளபதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த மக்கள் தமது வாழிபாட்டிற்கும் மீளக்குடியமாந்த பிள்ளைகளின் கல்வி நடவடிக்ககைளுக்காவும் தொடர்ந்தும் இராணுவ வசமுள்ள காணிகளை விடுவிக்கவேண்டும். குறித்த பகுதியில் பாடசாலை ஒன்றும், மேற்படி ஆலயமும் உள்ளது. எனவே இப் பகுதியினை விடுவிப்பதன் மூலமே மத வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என பலாலி பகுதிமக்கள் கட்டளைத்தளபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.