வயாவிளான் மத்திய கல்லூரி

0
167

வயாவிளான் மத்திய கல்லூரி
கல்லூரி வழாக

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் ஊடாக மாவட்ட அரச அதிபரின் நிதி மூலமும், கல்லூரி பழைய மாணவர்களின் நிதிமூலமும் இணைக்கப்பட்டு பின்வரும் செயற்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு கல்லூரிக்கு கையளிக்கப்பட்டது.

  1. கல்லூரியின் குடிநீர் வினியோகம் தடையின்றி வழங்குவதற்கு தானியங்கி முறையில் செயற்பட தேவையான மின்னியல் கட்டமைப்புக்கள் செய்யப்பட்டன.
  2. கல்லூரி வளாகத்தை சுற்றிவர 23 தூண்கள் நிறுத்தப்பட்டு, மின் வினியோகம் வழங்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. தானியங்கி முறையில் மின் ஒளி வழங்கப்பட்டுள்ளன.
  3. விளையாட்டு மைதானத்தை சுற்றி தூண்கள் நடப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. அத்துடன் மின் ஒளியில் நிகழ்வுகள் நடைபெற, அதற்குரிய மின் விளக்குகள் பெறப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.