ஃபிரான்ஸ் ஒன்றியம் ஊடாக பாடசாலை மாணவா்களுக்கு உதவிகள் வழங்க நடவடிக்கை…

0
858

ஃபிரான்ஸில் அமைந்துள்ள வயாவிளான் மக்கள் ஒன்றிம் ஊடாக நலிவுற்ற மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு உதவிகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயத்திற்கு மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டின் மக்கள் ஒன்றிய பிரதி நிதி இக் கருத்தினை தெரிவித்தார். வசாவிளான் கிழக்கு கோணாவளை கிராம அபிவிருத்தி சங்கத்தில் இடம்பெற்ற சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று கடந்த வாரம் இடம்பெற்றது.

இதன் போது மக்கள் ஒன்றிய பிரதிநிதி இக் கருத்தினை தெரிவித்தார். மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வசாவிளான் பகுதிகளின் அபிவிருத்தி, கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச மக்கள் கருத்து தெரிவித்தனர்.

இதன் போது மீள்குடியேறிய பகுதிகளில் உள்ள மாணவர்கள் வறுமைகாரணமாக பாடசாலை, மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்வதில்லை என எடுத்து கூறப்பட்டது. பிரான்ஸ் வாழ் வசாவிளான் மக்கள் ஒன்றியம் ஊடாக நலிவுற்ற மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு இங்குள்ள பிரதிநிதிகள் ஊடாக பண உதவிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக கிராமசேவையாளர் ஊடாக பாடசாலை செல்லாத மாணவர்களினை இனங்காண்பதற்கு கிராம அபிவிருத்த தலைவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி வழங்கியிருந்தார். இதன் பின் கிடைக்கும் தரவுகளை பொறுத்து குறித்த மாணவர்களுக்கு வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டு நேரடியாக கல்வி நடவடிக்கைக்குரிய உதவிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.