“வயாவிளான் கிழக்கு வீதிகள் புனரமைக்கப்பட்டது.“…

0
1276

வடக்கு கிழக்கு உள்ளுர் சேவைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வயாவிளான் கிழக்கு சுதந்திரபுரம், கன்னியர்மட இணைப்பு வீதிகள் 63இலட்சத்து 38ஆயிரத்து475 ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

உலகவங்கி மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதிவியுடன் இவ் வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

1,555 மீற்றர் நீளமான குறித்த வீதிகள் கற்கள் இடப்பட்டு பாரிய இயந்திரங்களினால் நிலம் சீர் செய்யப்பட்டு தார் ஊற்றப்பட்டுள்ளன. மேலும் 100 மீற்றர் வீதிகளுக்கு இரண்டாவது முறையாகவும் தார் ஊற்றி மேலும் மேற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 30 வருடங்களாக மேற்படி இணைப்பு வீதிகள் புனரமைப்பு இன்றி குன்றும் குழியுமாக காணப்பட்டன. தற்போது மீள்குடியேறிய பகுதிகளுக்கும், தெல்லிப்பளை செல்வதற்கும் குறுக்கு வீதியாக சுதந்திரபுரம் வீதிகளையே மக்கள் பாவித்து வருகின்றனர்.

இது தொடர்பில் வீதியினை புனரமைத்து தருமாறு வலிவடக்கு பிரதேசசபையிடம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் படி குறித்த வீதி புனரமைக்கப்பட்டுள்ளது