“மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்“ அமைப்பு உருவாக்கம்…

0
1746

“மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்“ அமைப்பு கோண்டாவிலில் அமைந்துள்ள வயாவிளான் மக்கள் ஒன்றிய அலுவலகத்தில் நேற்றுமுன்தினம்(08) அங்குரார்ப்ணம் செய்து வைக்கப்பட்டது.
30 வருட யுத்தத்தின் பின்னர் வயாவிளான்,பலாலி தெற்கு கிரமங்களின் மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு பிரதேசங்களில் துன்பத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
அதே போல் அன்மைக்காலமாக சில பகுதி மீள்குடியேற்றத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு பகுதி விரைவில் விடுவிக்கப்படும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் வயவை வாழ் மக்களுக்கும், மீளவும் சொந்த இடங்கள் வந்தவர்களுக்கு தேவையான வாழ்வாதார உதவிகளை, திட்டமிட்டு ஒழுங்கு படுத்துவறத்கு வலிந்து உதவும் சமூக அமைப்பாக இம் அமைப்பு செயற்படும்.
விசேடமாக வயாவிளான் புலம் பெயர் ஒன்றியங்கள் தமது வேலைத்திட்டத்தினை நிறைவு செய்வதற்காகவும், இப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் அரசசார்பற்ற நிறுவனம் அன்றி வலிந்து உதவும் சமூக அமைப்பாக இது செயற்படவுள்ளது.
புலம் பெயர் உறவுகளின் தாயக செயற்றிட்டங்களுக்கு உறவுப்பாலமாக செயற்படுதல், வாழ்வாதார அபிவிருத்தி, மற்றும் கிராமங்களின் கலாச்சாரம் விளையாட்டுக்களுக்கு தேவையான உதவிகளை என்பவற்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ் அமைப்பின் செயற்றிட்ட பணிப்பாளராக வல்லிபுரம் மகாலிங்கம் நிஜமிக்கப்பட்டுள்ளார். செயலாளர் நிதி எஸ்.யூ சந்திரகுமாரன் செயற்படுவார்.