பழு தூக்கல் போட்டியில் வயாவிளான் மத்திய கல்லூாி தேசிய மட்டத்தில் சாதணை..

0
1262

பழு தூக்கல் போட்டியில் வயாவிளான் மத்திய கல்லூாி தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் சாதணை படைத்து, கல்லூாிக்கு வராலாற்று சாதணையை பெற்றுக்கொடுத்துள்ளது.

“2016“ ஆம் ஆண்டு முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட பழுதூக்கல் போட்டியில் திறந்த மட்ட போட்டிகளில் மாகாண தேசிய மட்ட போட்டிகளில், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களையும், பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற தேசிய மட்ட போட்டிகளில் வெள்ளி வெண்கல பதங்கங்களை அள்ளி குவித்துள்ளது.

இவ் இரண்டு வெற்றிகளும் பாடசாலை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை இவ் இரண்டு வெற்றியும் தேசிய மட்டத்தில் பெற்றுக்கொண்ட வெற்றிகளாகும்.

இப் போட்டியில் பங்கு பற்றிய மாணவா்கள் பல மைல் தூரம் சென்றே தங்களுக்கான பயிற்ச்சிகளை பெற்று வருகின்றனா்.

பழு தூக்கல் போட்டிகளுக்கான உபகரணங்கள் பாடசாலையில் இருக்குமானால் பல வீரங்கணைகளை இப் பாடசாலையில் உருவாக்க முடியும் என பாடசாலை சமூகம் நம்பிக்கை வெளியிடுகின்றது.

தற்போது பயிற்ச்சியில் ஈடுபடுகின்ற மாணவா்கள் போசாக்கு பால்மா வகைகள், சீருடைகள் காலணிகள், என்பவற்றை ஏணைய பாடசாலை மாணவா்களிடம் இருந்தே  கைம்மாறாக பெற்று பயிற்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றாா்கள் என்பது கவலைக்குாிய விடயமாக காணப்படுகின்றது.