வயாவிளான் மேற்கில் 1 மில்லியன் ரூபா செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் …

0
1233

தெல்லிப்பளை, பிரதேச செயலகத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமத்திற்கு 1 மில்லியன் ரூபா திட்டத்தில் வயாவிளான் மேற்கு சிவசக்தி முன்பள்ளியுடன் சேர்ந்து ஆரம்ப சுகாதார நிலையம், சமூர்த்தி உத்தியோகத்தர் அலுவலகம், மற்றும் வசீக சாலை என்பன அமைக்கும் பணி இடம்பெற்று வருகிறது

2010 ஆண்டு மீள் குடியேற்றம் செய்யப்பட்ட வளாவிளான் மேற்கு பகுதியில் இதுவரை ஆரம்ப சுகாதர நிலையம் இன்மையாலும், சமூர்த்தி உத்தியோகத்தருக்குரிய அலுவலகம் இன்மையாலும், இப் பகுதியில் வாழும் கர்பினி பெண்கள், மற்றும் சிறுவர்கள் நீண்டதூரம் சென்றே மருத்துவ சிகிச்சைகளை பெறவேண்டியிருந்தது. இது தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு அமைய பிரதேச செயலர் ஆரம்ப சுகாதாரம் நிலையம் ஒன்றினை அமைத்து தருவதாக உறுதியளித்திருந்தார்.

இது வரை காலமும் வயாவிளான் சிவசக்தி முன்பள்ளியிலேயே கலந்துரையாடல்கள் மற்றும் ஏனைய பொது அமைப்புக்களின் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது முன்பள்ளியுடன் இணைந்துள்ள காணியில் இரண்டு அறையும், ஒரு வாசிகசாலைக்குரிய இடவசதியும் கொண்டு கட்டிடப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக் கட்டிடம் அமைக்கப்படுவதனால் எதிா்வரும் காலத்தில் இப் பகுதி மக்கள் சிறந்த சுகாதார பெற்றுக்கொள்ள முடியும்