வயாவிளான் மத்திய கல்லூரிக்கு குழாய்கிணறு…

0
1264

வயாவிளான் மத்திய கல்லூாி அதிபர் வீ.ரி ஜெயந்தன் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையினால் குழாய் கிணறு ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள குழாய் கிணறு கோடை காலத்தில் வற்றி போவதனால் பாடசாலைக்கு தேவையான நீரினை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்கள் எதிர் நோக்க வேண்டியிருந்தது.
மேலும் பாடசாலை மாணவர்களின் தொகைக்கு ஏற்ப நீர் பெறுவது ஒரு சிரமமாக இருந்ததுடன் பல பயண்தரு மரங்களுக்கும் நீர் பாய்ச்ச முடியாமல் போயிருந்தது. இதனையடுத்து கல்லூரி முதல்வரின் வேண்டுகோளுக்கு ஏற்ப 27 அடி ஆழமுடைய புதி குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாரிய நீர்த்தொட்டி ஒன்றும் நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றின் தேவைப்பாடு கல்லூரிக்கு தேவையான ஒன்றாக உள்ளது. எனவே இவ் இரண்டினையும் அமைத்து தர நலன் விரும்பிகள் முன்வரவேண்டும் என கல்லூரி சமூகம் வேண்டுகோள் விடுக்கின்றது.