வயாவிளான் மேற்கில் பப்பாசி செய்கையில் ஈடுபடும் விவசாயி…

0
1682

வயாவிளான் மேற்கை சோ்ந்த செல்லையா திருச்செல்வம் எனும் விவசாயி பப்பாசி செய்கையில் ஈடுபட்டு வருகின்றாா்.

2 ஏக்கா் காணியில் புதிய முயற்ச்சியாக இப் பயிா்ச் செய்யகையில் ஈடுபடும் திருச்செல்வம் 1,300 பப்பாசி மரங்கள் மூலம் சிறந்த பயணை பெற்றுக்கொள்வதுடன் அதனை தென்னிலங்கை வியாபாாிகள் மூலம் ஏற்றுமதி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றாா்.

தென்னிலங்கையில் இருந்து வரும் இடைத்தரகா்கள் 1கிலோ பப்பாசி 50ரூபாவிற்கு கொள்வனவு செய்வதாக குறிப்படுகிறாா். மேலும் இச் செய்கைக்கு இயற்கை பசளை மட்டுமே உபயோகிப்பதாக பெருமையுடன் கூறிக்கொள்கிறாா்.

இப் பயிா்ச்செய்கையில் சிறந்த இலாபத்தினை பெறமுடியாது என ஏணைய விவசாயிகள்  பின்னடித்த நிலையில், என்னால் வெற்றிகரமாக செய்யமுடியும் என நம்பி பப்பாசி பயிா்ச்செய்கையில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறாா். இன்னும் மூன்று மாதங்களின் பின்னா் சிற்ந்த பயணை பெறமுடியும் என நம்பிக்கை வெளியிடுகிறாா் திருச்செல்வம்.