புலம் பெயா் வயாவிளான் மக்களுக்கான வேண்டுகோள்.

0
24896

மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் -வயாவிளான்
HELPING HANDS FOR RE-AWAKENING – VAYAVILAN

இல. 159-2 கே.ஆா் லேன்,
பலாலி றோட், கோண்டாவில்

வயாவிளான் மக்கள் ஒன்றியம்

             பிரான்ஸ், ஜோ்மனி,சுவிஸ்லாந்து, கனடா, லண்டன், அவுஸ்திரெலியா

அன்பான புலம்பெயா் உறவுகளிற்கு,

தங்கள் அணைவரதும் நீண்டகால கோாிக்கைக்கு அமைய புலம் பெயா் உறவுகளின் தாயகத்திற்கான நலனோம்புச் செயற்றிட்டங்கள் முன்னெடுப்பதற்கான சமூக சேவை அமைப்பாக 02.09-2016ம் திகதி ‘மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்- வயாவிளான்‘ என்ற அமைப்பு அங்குராா்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது என்பதை தங்களிற்குத் தொியப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

எமது அமைப்பின் நோக்கம்,செயற்றிட்டஙகள், நம்பிக்கையாளா் சபை பற்றிய விபரங்கள் வருமாறு-

நோக்கம்
வயாவிளான்,பலாலி தெற்கு கிராமங்களின் மீளக்குடியமா்வு, வாழ்வாதார மேம்பாடு, மீள் எழுச்சிக்கான வலுவினை ஏற்படுத்தல்

செயற்றிட்டங்கள்-
1)மீள்குடியேறிய, இடமபெயா்ந்து வாழும் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு, புனா்வாழ்விற்கான உதவிகள் வழங்குதல்

2) புலம்பெயா் உறவுகளின் தாயகத்திற்கான செயற்றிட்டங்களுக்குப் பாலமாகச் செயற்படுதல்

3)கிராமத்தின் படித்த இளைஞா், யுவதிகளின் ஆளுமை விருத்தக்கான வழிகாட்டல் கருத்தரங்குகள், செயலமா்வுகள் நடாத்துதல், தொழிற்பயிற்சி வகுப்புக்களை நடாத்துதல்

4)கல்வி, விளையாட்டு, கலை வளா்ச்சிக்கு உதவுதல், சிதைவுற்ற பண்பாட்டு விழுமியங்களை மீளக்கட்டியெழுப்புதல், பேணுதல்

5)கிராமத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் பசுமைக்கிராமமாக மிளிரச்செய்தல்

நம்பிக்கையாளா் சபை

1” திரு .வல்லிபுரம் மகாலிங்கம் செயலதிபா்

2” திரு. சடையன் இரதசலிங்கம் செயலாளா்- நிா்வாகம்

3“ திரு. உலகநாதன் சந்திரகுமாரன் செயலாளா் நிதி

4“திரு. வல்லிபுரம் சத்தியசீலன்-( பணிப்பாளா் –
மீள்குடியமா்வும், நிவாரணமும்)

5“திரு.சுப்பிரமணியம் செல்வரத்தினம் (பணிப்பாளா்)
கல்வி,கலாசாரம், விளையாட்டு

6“ சுப்பிரணமணியம் ஞானலிங்கம் (பணிப்பாளா்)
வாழ்வாதர மேம்பாடும், சமூக சேவைகளும்)
7”கே.செல்வநாயகம் (பணிப்பாளா்) பொதுசன உறவுகள்

விரைவில் எமது அமைப்பின் அமைப்பு விதிகள் பற்றித் தங்களிற்குத் தொியப்படுத்தப்படும். அது தொடா்பில் தங்களின் அபிப்பிராயங்களும், ஆலோசணைகளும் வரவேற்கப்படுகின்றன.

நன்றி
செயலதிபா்
மகாலிங்கம்
‘மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் -வயாவிளான்”

தொலைபேசி இலக்கம் -0094777036933
மின்னஞ்சல் -vayavilanhhra@gmail.com