About Us

v2

அன்பான வயாவிளான் வாழ் மக்களே,
வயாவிளான் வாழ் மக்களில் புலம் பெயர்ந்து வறுமையின் கீழ் வாழும்மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும்குடும்பங்களுக்கும் உதவி செய்வதற்காக இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.புலம் பெயர்ந்து வாழும் எமது உறவுகளின் நிதி பங்களிப்பின் ஊடாக இதனைசெயற்படுத்துகின்றோம்.

வயாவிளான் வாழ் மக்கள் ஒன்றியம்
பிரான்ஸ், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, கனடா, இங்கிலாந்து, அவுஸ்ரேலியா.

தங்கள் அனைவரதும் நீண்டகால கோரிக்கைக்கு அமைய புலம்பெயர் உறவுகளின்தாயகத்திற்கான நலன்புரிச் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்காக சமூக சேவை அமைப்பாக 02.09.2016ம் திகதி  மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் வயாவிளான்  அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது என்பதனை தங்களுக்கு தெரியப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

நாங்கள் செயற்திட்டங்கள் பற்றி தங்களின் ஆலோசனைகளும், அபிப்பிராயங்களும வரவேற்கப்படுகின்றன.

வாழ்வாதார திட்டம் 2016 – 2017 கல்வி
1. உதவி கோரும் இடம்பெயர்ந்து வாழும் தாய், தந்தையற்ற வறிய மாணவர்களின்  கல்விச்செலவை முற்று ழுழுதாக பொறுப்பெடுத்தல்,   அத்தியாவசிய செலவையும் பொறுப்பெடுத்தல்

2. உதவி கோரும் வறிய மாணவர்களின் கல்விச்செலவை முற்று ழுழுதாக          பொறுப்பெடுத்தல், தேவை ஏற்படின் அத்தியாவசிய செலவையும் பொறுப்பெடுத்தல்

3. இடம்பெயர்ந்து வாழும் வறிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய செலவுக்கான உதவிகள்      (பணம், பொருட்கள், உடைகள்)

4. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் வறிய குடும்பங்களுக்கு இருப்பிட வசதிகளை      அமைப்பதற்கான உதவிகள் (வீடு, வீட்டுபொருட்கள், மின்சாரம்)

5. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு தேவையான உதவிகள்.
6. வறிய மாணவர்களின் கல்விச்செலவிற்கு உதவி செய்தல்.
7. பின்தங்கிய கிராமங்களில் வாழும் அனைத்து மாணவர்களுக்கும் தேவையான      பாடசாலை உபகரணங்களை வழங்குதல்
8. கல்வி வளர்ச்சிக்கான உரையாடல்கள்;, உற்சாகப்படுத்துவதற்hன உதவிகள்.

வாழ்வாதார திட்டம் 2016 – 2017 விளையாட்டு

1. பின்தங்கிய கிராமங்களில் வாழும் அனைவருக்கும் விளையாட்டு உபகரண்கள்,   உடைகள் வழங்குதல்.
2. விளையாட்டு மைதானங்களை பெற்றுக்கொடுப்பது, அல்லது புனரமைப்பது
3. பயிற்சியாளரை தெரிவு செய்தல், அல்லது வழங்குதல்..