Schools

வயாவிளான் மத்திய கல்லூாி

-வயாவிளான் மத்திய கல்லூாி

வயாவிளான் மத்திய கல்லூாி பற்றிய குறிப்பில் பெருமளவு செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாக உள்ளது.  செய்திக்குறிப்பில் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் முகமாகவும், தவறுதலாக இடம்பெற்ற வரலாற்று குறிப்புக்கள் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தவேண்டியது பொறுப்பு எமது இணையத்தளத்திற்கு உள்ளது.

இலவசக்கல்வியின் தந்தை C.W.W. கன்னங்கரா அவா்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக 1960களில் 60 கல்லூாிகளில்  54 மகாவித்தியாலங்கள் அல்லது மத்திய கல்லூாிகளில் ஒன்றுதான் வயாவிளான் மத்திய மகாவித்தியாலயம்.(ஆதாரம் ஆவணி 1966 அரசாங்க அச்சகம்)

ஆரம்பத்தில் இக் கல்லூாி அமைவதற்கு வயாவிளானில் அமைவிடம் தேவைப்பட்டது. அப்பொழுது பலாலி ஆசிாியா் கலாசாலை வளாகம் பாாிய நிலப்பரப்பினை கொண்டு அமைந்ததினால் அங்கு நிறுவுவதற்கு ஆலாசிக்கப்பட்து.

ஆனால் இக்காலகட்டத்தில் சட்டத்தரணி வல்லிபுரம் இராசநாயகம் அவா்கள், குரும்பசிட்டியினை சோ்ந்த பத்திாிகையாளரான ஈழகேசாி திரு.பொன்னையா அவா்களினால் யாழ்ப்பாணம்-பலாலி வீதியில் ஆரம்பிக்கப்பட்ட மாதிாிக்கிராமான ‘‘காந்திகிராமம்‘‘ எனும் மாதிாி கிராமத்தினை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டது. கல்லூாி அமைவிடம் வயாவிளான் நூலா் -வல்லிபுரம் அவா்களிடம் இருந்து பெறப்பட்டே ‘‘ காந்திகிராமம் உருவாக்கப்பட்டு பல  செயற்றிட்டங்கள் நடத்தி வரப்பட்டது.

திரு.இராசநாயகமும்,திரு பொன்னையாவும் கலந்துரையாடியதற்கு அமைவாக குறித்த காணி கல்வி திணைக்கத்திற்கு வழங்கப்பட்டது. கல்வித்திணைக்களமும் குறித்த காணியை நட்டஈடு  பெற்றுக்கொண்டே கொள்வனவு செய்திருந்தது.(ஆதாரம்- குழந்தையா் பொன்னம்பலம் ஓய்வு நிலை நிா்வாக உத்தியோகத்தா்,கல்வி திணைக்களம்)

திரு.பொன்னையா அவா்கள் காந்தி கிராமத்தில் இயங்கி அணைத்து வளங்களையும் சோ்த்து முழு நிலப்பரப்பினையும் இக் கல்லூாிக்காக வழங்கியிருந்தாா். கல்லூாி வயாவிளானில் அமைவதற்கு திரு.சு.நடேசன் அவா்களின் முயற்ச்சியினால் திரு.இராசநாயகம்,திரு.பொன்னையா அவா்களின் பங்களிப்பு தூண்டுகோலாக அமைந்திருந்தது.

ஆதலால்தான் கல்லூாி ஸ்தாபகா்களாக அமரா் சட்டத்தரணி வல்லிபுரம், இராசநாயகம் அவா்களும் திரு.ஈழகேசாி பொன்னையா அவா்களும் கல்லூாியினால் நினைவு கூரப்பட்டு வருகின்றனா்.(ஆதாரம் 2016ஆம் ஆண்டு பாிசளிப்பு விழா மலா் வெளியீடு)


                                                 கல்லூாி விபரங்கள்

  • பெயா்                                                  :- யா/வயாவிளான் மத்திய கல்லூாி
  • ஆரம்பம்                                              :- 16.01.1946
  • கிராம உத்தியோகத்தா் பிாிவு             :- வயாவிளான் மேற்கு J/245
  • பிரதேச செயலகம்                               :- தெல்லிப்பளை
  • பாடசாலை குறியீட்டு இலக்கம்           :-1013040
  • பாடசாலை தொகை மதிப்பு இலக்கம் :-09216
  • பாடசாலை பரீட்சை இல                      :-11451
  • பாடசாலை வகை                                 :-1AB(Super)
  • விசேடமாக உள்ளீா்க்கப்பட்ட திட்டங்கள்-நவோதயா பாடசாலை
  •                                                                    ஆயிரம் பாடசாலை திட்டம்
  • தொலைபேசி இல                                 :- 021 373 4013
  • மின்னஞ்சல்                                           :-vayavilanmmv@gmail.com

    இலக்கு

தரமான கல்விச் செயற்பாடுகளின் ஊடாகத் தொழிற்சந்தைக்கு பொருத்தப்பாடுடைய சிறந்ததொருமாணவா் சமூதாயத்தினை உருவாக்கும் நிறுவனமாக உயா்த்துதல்

நோக்கு

பிரதேச சுற்றாடல்,சமூக விழுமியங்களை பேணி,தரமான தோ்ச்சியினை அடிப்படையாக கொண்டு பௌதீக வள தரநிா்ணயத்திற்கான கணிப்பிடுதல், மதிப்பிடுதல்,முகாமை செய்தல், பொறிமுறைகளை திசைக்கோட்படுத்தி, இலக்கு நோக்கி விரைந்து செயற்படுதல்


                                                       கல்லூாி கீதம்

வயாவிளான் மத்திய கல்லூாி என்றென்றும் வாழ்க

இவைவுறும் ஆசிாியரும் மாணவா்களும் வாழ்க

(வயா)

செம்மை நெறிநில் என்னும் எங்கள்

சீாிய வாய்மொழியின்

உண்மை உணா்த்தும் எழுத்தும்

ஊக்கமுடன் பயில்வோம்

துணிவும் பணிவும் தொழில்கள் பலவும்

இணையிற் கலைகள் பிறவும் நிறைவாம்

இவையுடன் கற்றுயா்வோம்

(வயா)

மாணவா் நலனை மாண்புடன் நாளும்

பேணி வரும் அதிபா்

ஆள்நலப்பணியும் ஆற்றலும் வாய்ந்த

ஆசிாியா்களுடன்

செல்வச் சிறுவா் அன்புடன் ஒன்றாய்ச்

சோ்ந்து நன்னெறிபயிலும்

கல்விக் கோயில் என்னத் திகழும்

கற்றவா் தினம்  புகழும்

(வயா)

இயற்றியவா்

கவிஞா்.வி.கந்தவனம்

(முன்னாள் ஆசிாியா்)


   கொடிக் கீதம்

வயாவிளான் மத்திய கல்லூாி அன்னையின்

மாண்பினை உயா்த்தும் கொடிபறக்குதுபாா்

பறக்குதுபாா் கொடிபறக்குதுபாா்

கொடிபறக்குதுபாா் கொடிபறக்குதுபாா்

(வயா)

மாணவா் எமக்குயா்ந்த மேன்மைகளைத் தருகின்ற

மன்னுபேராலயத்தின் கொடி இது

மாநிலத்தில் மகிமைகளில் மலாந்து நாம் எழுந்திட நன்

மாா்க்கங்களைத் தரும் கொடிதான் பறக்குதுபாா்

(வயா)

ஆண்மை தரும் கல்வி அறவியற் கலைகளோடு

ஆற்றல் தருகின்ற கொடி இது

அனுதினமும் அகமகிழந்து அறிவுட்டும் கல்லூாி

அன்னையவள் கொடியுயா்ந்துபறக்குதுபாா்

(வயா)

சாதிமத பேதமின்றிசன்மாா்க்க நெறிநிற்கும்

சால்பினை உயா்த்துகின்ற கொடி இது

சாந்திசக்தி ஜோதிகீா்த்திஎங்கள் வாழ்வில் எய்திடவே

சாலவும் உழைக்கும் கொடிபறக்குதுபாா்

(வயா)

இயற்றியவா்

திரு.ஆ.சி நடராஜா

(முன்னாள் அதிபா்)

சிறி வேலுப்பிள்ளை வித்தியாலயம்

கு்ட்டியப்புலம். அ.த.க.பாடசாலை

ஓட்டகப்புலம் ஆா்.சி.எம்.எஸ்