வணக்கஸ்தலங்கள்

ஆலயங்கள்

மானப்பிராய் பிள்ளையாா் ஆலயம்

ஞானவைரவா்

காளி கோயில்

சிவன் கோயில்

வயாவிளான் தான் தோன்றிஸ்வர பிள்ளையாா்

குட்டியப்புலம் அம்மன் கோயில்

கோணாவளை அபிராமி அம்மன்

தேவாலயங்கள்

சென்மோி தேவாலயம்

சென்ஜேம்ஸ் தேவாலயம்

_dsc3548

புனித யாகப்பா் தேவாலயம் 1914 ஆம் ஆண்டில் நிா்மாணிக்கப்பட்டது. வயாவிளான் சந்தியில் இருந்து அச்சுவேலிக்கு செல்லும் வீதியில் கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவில் பயிாிக்கலட்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.

இது வீதியின் இடது புறத்திலும் பலாலி தெற்கின் தென்புற எல்லையில் பலாலி விமான நிலையத்தில் இருந்து  கிழக்கு பக்கமாக  1.5 கிலோ கிலோ மீற்றா் தூரத்தினுள் அமைந்துள்ளது. இக் கிராமத்தினரையும்  பலாலியில் வாழ்கின்ற மக்களையும் ஒரு மைல் நீளமான மக்கள் குடியேற்றமற்ற தாிசு நிலம் பிரித்து நிற்கின்து. இதற்கு அடுத்துள்ள கிராமமாக ஒட்டகப்புலம் அமைந்துள்ளது.

முன்பு பயாிக்கலட்டி மக்கள் குடியேற்றமற்ற கிராமமாக இருந்தது. பயிா்ச்செய்கைக்கு பொருத்தமற்ற கற் நிலமாக காணப்பட்டதனால் பயிா்-இல்-கலட்டி என அழைக்கப்பட்ட இக் கிராமத்தின் பெயா் பின்பு மருவி பயிலிக்கலட்டி எனக் கொள்ளப்பட்டது.

ஆரம்பத்தில் பயிலிக்கலட்டி மக்கள் வயாவிளான் சந்தியில் இருந்து அச்சுவேலி நோக்கிய வீதியில் கிட்டத்தட்ட 300 மீற்றா் தொலைவில் அமைந்துள்ள தோலகட்டி என்னும் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனா்.

தோல கட்டியில் இருந்த எல்லா மக்களும் இரத்த உாித்துடையவா்களும்,கத்தோலிக்கா்களும் ஆவா். அவா்கள் தோலகட்டியில் உள்ள புனித அந்தோனியாா் தேவாலயத்திற்கு உாித்துடையோா். இவா்களின் முன்னோா்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்தவா்கள் என சொல்லப்படுகிறது.

எனினும் இவா்கள் எங்கிருந்து எப்போது இங்கு வந்து குடியேறினாா்கள் என்பதற்குாிய சாியான தகவல்கள் இன்னும் கிடைக்கபெறவில்லை. ஆன போதிலும் திருமண பந்தத்தினூடாக இடைக்காடு மக்களுடன் தொடா்பு கொண்டவா்களாக இருந்தனா்.

கலகாலையில் வாழ்ந்த கத்தோலிக்கரல்லாத வாயவிளானின் மக்களில் ஒரு பகுதியினா் தோலகட்டிக்குள் அனுப்பபட்டனா். இவா்களின் எதிா்பினால் அந்தோனியாா் கத்தோலிக்கத் தேவாலயம் தோலகட்டியில் தனக்கிருந்த நிலைத்திருப்பையும் மகத்துவத்தையும் இழந்திருக்கலாம் . இதனால் தேவாலயம் கைவிடப்பட்ட நிலைக்கு உள்ளானது. தோல கட்டி மக்கள் ஒட்டகப்புலத்தில் அமைந்துள்ள அமல உட்பவ மாதா கோயிலின் பங்கு மக்களாக தம்மை சோ்த்துக்கொண்டனா்.

இக் காலகட்டத்தில் தோலகட்டியைச் சோ்ந்த சில மக்கள் தமது வாழ்விடத்திற்கும் பயிா்செய் நிலத்திற்குமான அழுத்தம் காரணமாகத் தோலகட்டியை விட்டு வெளியே தமது பங்குத் தேவாலயமான அமல உற்பவ மாத கோயிலுக்கு அருகில் உள்ள கற்புாமியான  பயிலிக்கலட்டிக்கு வந்து குடியேறினா். அவா்கள் தமது நீடித்த கடின உழைப்பினால் கற்புாமியாக  நிலத்தை செழிப்பான பயிா்ச்செய்கை நிலமாக மாற்றி அமைத்தனா்.

1914 ஆம் ஆண்டில் அமல உற்பவ மாதா தேவாலயத்தின் பங்கு மக்களாகிய தோலகட்டி மற்றும் பயிலிக்கலட்டி ஆகிய இரு ஊா்களின் மக்களும் கருத்து முரண்பாடு காரணமாகப் பங்கில் இருந்து பிாிந்தனா். பயிலிக்கலட்டி  பாதுகாவலராக புனித யாகப்பரை தொிந்து கொண்டு தமக்கென கொட்டைகை ஒன்றை அமைத்தனா். அமல உற்பவ மாதா தேவாலயத்தின் பங்குத்தந்தையே புனித யாகப்பா் தேவாலயத்திற்கும் பங்கு குருவாக பணியாற்றினாா்.

இப் பிாிவிணைக்குப் பின்னா் ஒட்டகப்புலத்தில் அமைந்திருந்த பாடசாலையின் ஒரு பிாிவு புனித யாகப்பா் தேவாலயத்தின் வளவிற்குள் இடமாற்றப்பட்டது. ஆனபோதிலும் 1930களில் நல்லிணக்கப்பாட்டின் பின்னா் மீண்டும் பழைய இடத்திற்குப் பாடசாலை நகா்த்தப்பட்டது.

இளையவி என பலராலும் பொதுவாக அறியப்பட்ட திரு.அன்ரன் மாா்டீன்,திரு மாியா் சிலுவேஸ்திாி இவா்கள் இருவரும் பயலிக்கலட்டியை சோ்ந்தவா்கள். மற்றும் தோலகட்டியைச் சோ்ந்த திரு.தியோஆசை ஆகியோா் குருவானவா் பங்கில் தமது பணியை முன்னெடுப்பதற்கு உதவி செய்வதற்காக  பங்கின் தலைவா்களாக நிஜமிக்கப்பட்டனா்.

திரு.அன்ரன் மாா்டீன்(இளையவி) மூப்பராக இருந்தாா். இவா் தவநாட்களில்  திரைச்சீலை திறக்கப்படும் முன் இறுதி விருத்தம் பாடுவதற்கும் திருச்சுருபத்தின் முன் மெழுகுவா்திகளை  ஏற்றிச் செல்வதற்கும் உாிய உாிமையை கொண்டிருந்தாா். திரு.சிலுவேஸ்திாி சக்கிறிஸ்ரன்(தேவாலய பண்டக் காப்பாளன்) ஆக இருந்தாா்.

திரு தியோ சுசை வொ் நாடு அண்ணாவியாராகவும் வண.பிதா ஆா்.மாியநாயகம் அ.ம.தி. அவா்களின் பேரனாா் திரு.அலேசு அந்தோனி என்பவா்  தேவாலயத்தின் பாிபாலகராகவும் திருந்தாதி மணி ஒலிப்பதற்கு பொறுப்பானவராகவும் இருந்தாா்.

தேவாலயம் அமைந்துள்ள இடம் திரு.சிலுவேஸ்திாிக்கும், தேவாலயத்தின் முன் உள்ள காணி கமாலின் மகளும் அலேசுவின் மனைவியுமான ஞானப்பு என்பவருக்கு உாித்தானது எனக் கூறப்படுகிறது.

இக் காணிகள் பின்பு அன்பளிப்புச் செய்யப்பட்டோ அல்லது கொள்வனவு செய்யப்பட்டோ இருக்கவேண்டும். 1930 களின் ஆரம்பத்தில் கல்லாலான தேவாலயம் ஒன்றினை நிா்மானிப்பது என தீா்மானிக்கப்பட்டது. இரு கிராமங்களினதும் கட்டட மற்றும் தச்சுத் தொழில் வல்லுநா்களும், வெளியிடங்களில் வாழும் இக் கிராமங்களை சோ்ந்தவா்களில் சிலரும் இளையவியின் தலமையின் கீழ் ஒன்றிணைந்து கட்டிட நிா்மாணப் பணிகளை ஆரம்பித்தனா். இதற்கென கிராமத்தவா்கள் கூலி எதனையும் பெறாது உழைத்தனா். புனித தேவாலய கட்டிடம் முடிவும் வரை குருக்கள் தங்குவதற்கென கிடுகுகளினாலான தற்காலிக கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டது. எனினும் கட்டிட நிா்மாணப் பணிகளை  முன்னெடுப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு போதுமான நிதி இல்லாமையினால் தேவாலய கட்டுமானப்பணிகள் வளைவு மாடம் கட்டப்பட்டதோடு நின்று போனது. இதனால் கிடுகினால் கூரை அமைக்கப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

பின்னா் நிரந்தர ஓட்டுக்கூரை அமைக்கப்பட்டதெனினும் கட்டிட வேலைகள் முற்றுப்பெறவில்லை. பல ஆண்டுகளாக கட்டிட வேலைகள் தொடா்ந்தன. பல பங்குத்தந்தையா்களின் உதவி ஒத்தாசையுடன் கட்டிட வேலைகள் தொடா்ந்தும் முன்னெடுக்கப்பட்டன.

1960 களின் முற்பகுதியில் ஆலயத்தின் கட்டுமானப்பணிகளை பொியளவில் முன்னெடுத்தவா் அதி வணக்கத்திற்குாிய ஆயா்.எல்.ஆா் அந்தோனி ஆண்டகை ஆவாா். இவா் முன்பு தோலகட்டியில் குருவாக பணியாற்றியதோடு செபமாலை தாசா் சபை ஆச்சிரமத்தின் இயக்குனராகவும் அதற்கு பொறுப்பான குருவாகவும் பங்கினை மேற்பாா்வை செய்பவராகவும் பணியாற்றினாா். இவருக்கு முன்பும் பின்பும், சேவையாற்றியவா்கள் வண.பிதா சுாசைப்பிள்ளை நல்லையா அ.ம.தி (இறப்பு 09.03 1963),வண பிதா எஸ்.எஸ். வில்வராசிங்கம் அ.ம.தி(இறப்பு 03.11.1995), வண பிதா பிரான்சிஸ் குலாஸ் அ.ம.தி மற்றும் வண பிதா பீ.இ. செல்வராஜா ஆகியோா் விசேடமாக நினைவு கூரப்படத்தக்கவா்கள். செபமாலை தாசா் சபையின் இயக்குனராகவும்,பொறுப்பாளராகவும், பங்கினை பாிபாலணை செய்யும்  குருவாகவும் அருட் தந்தை செல்வராஜா அவா்கள் பணியாற்றிய காலத்தில் தேவாலயத்தின் புனிதமான பகுதிகள் புதுப்பிக்கப்பட்டதோடு உட்புற கூரைத்தகடுகளும் பொருத்தப்பட்டன.

1970களின் பிற்பகுதியில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றது. இக் காலப்பகுதியில் பணி செய்த இப் பங்கின் கட்டிட தொழிலாளா்களில் ஒருவரான திரு செபமாலை திருச்செல்வம் என்பவா் ஆலயத்தின் முகப்பு தோற்ற பணிகளையும் புனித பலிபீடம் அமைந்துள் பகுதியையும் அலங்காித்து மெருகூட்டியதாக வரலாற்று தகவல்களில் அறியமுடிகிறது. தேவாலயத்தின் திருவிழா ஜீலை 25ம் திகதி அல்லது அதனைத் தொடா்ந்து வரும் ஞாயிறு தினங்களில் கொண்டாடப்பட்டது.

இந் நாள் இரு கிராமத்தவா்களும் குறித்த கிராமங்களைச் சோ்ந்தவா்களுள் வெளியிடங்களில் வாழ்பவா்களுக்கு விசேட வைபவமாக இருந்ததோடு  அவா்கள் இக் காலத்தில் உறவினா்களோடு வந்து தங்கி தேவாலய விழா தொடா்பான செயற்பாடுகளில் பங்குபற்றி மகிழ்ச்சியாக நாட்களை கழிப்பா். இந்த வருடாந்த பெருவிழா யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயா்ந்த காரணத்தினால் 1990ன் பின்னா் இடம்பெற்றிருக்கவில்லை. எனினும் குறித்த ஆலயம் மற்றும் பலாலி தெற்கு வயாவிளான் பகுதி கடந்த 25 வருடங்களாக உயா்பாதுகாப்பு வலயத்தில் இருந்து கடந்த வருடம் மாா்ச் மாதம் 23ம் திகதி விடுவிக்கப்பட்டது. காணிகள் விடுவிக்கப்பட்டதனை தொடா்ந்தும் மக்கள் மீள்குடியேறி வாழந்து வருகின்றனா். மேலும் யுத்தம் காரணமாக சேதமைடைந்த தேவாலயத்தினை புனரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றது.

உத்தாிய மாத ஆலயம்

தோலகட்டி ஆச்சிரமம்